மராட்டியத்தில் இன்று 207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


மராட்டியத்தில் இன்று 207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 15 March 2022 9:51 PM IST (Updated: 15 March 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இன்று 207 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, மராட்டியத்தில் இன்று 207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 71 ஆயிரத்து 566 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 290 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 77 லட்சத்து 21 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.

Next Story