உக்ரைனில் இருந்து சுமார் 23 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்பு - பிரதமர் மோடி பெருமிதம்
உக்ரைனில் இருந்து சுமார் 23 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தூதரக அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உக்ரைனில் இருந்து சுமார் 23,000 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளில் இந்த மீட்பு நடவடிக்கையை நடத்துவது மிகவும் சவாலானது. உக்ரைனில் இருந்து 18 நாடுகளை சேர்ந்தவர்களையும் நாம் பத்திரமாக மீட்டுள்ளோம். உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு 90 டன் உதவிகளை அனுப்பியுள்ளோம். என்று கூறினார்.
Related Tags :
Next Story