நாடாளுமன்றம் செல்லும் ஹர்பஜன் சிங்?
ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அமிர்தசரஸ்,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பஞ்சாபின் முதல் மந்திரி வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார்.
இந்த நிலையில், பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் இன்று பதவியேற்று கொண்டார். .
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
முன்னதாக ஆம் ஆத்மியின் வெற்றிக்குப் பிறகு, ஹர்பஜன் சிங் , பகவந்த் மான் வெற்றி பெற்றதற்கு வாழ்த்தி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் . "புதிய பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது நண்பர் பகவந்த்மான் அவர்களுக்கும் வாழ்த்து என அந்த பதிவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
Related Tags :
Next Story