45 நாட்களில் போர் விமான துறைக்கு 7 அடுக்கு கட்டிடம்; டி.ஆர்.டி.ஓ. சாதனை


45 நாட்களில் போர் விமான துறைக்கு 7 அடுக்கு கட்டிடம்; டி.ஆர்.டி.ஓ. சாதனை
x
தினத்தந்தி 17 March 2022 3:05 PM IST (Updated: 17 March 2022 3:05 PM IST)
t-max-icont-min-icon

சாதனை பதிவாக 45 நாட்களில், போர் விமான துறைக்கு டி.ஆர்.டி.ஓ. அமைப்பு கட்டிய 7 அடுக்கு கட்டிடம், மத்திய பாதுகாப்பு மந்திரியால் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.



பெங்களூரு,


கர்நாடகாவின் பெங்களூரு நகரில், எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்க கூடிய நவீன நடுத்தர வகையை சேர்ந்த போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வந்தது. 

7 அடுக்குகளை கொண்ட இந்த கட்டிடத்தினை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) நாற்பத்தி ஐந்தே நாட்களில் கட்டி முடித்து சாதனை படைத்து உள்ளது.

இந்த கட்டிடம், போர் விமானங்களுக்கான மின்னணு சாதனங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட உள்ளது.  இதனை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்துள்ளார்.  அவருடன், திறப்பு விழாவில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, டி.ஆர்.டி.ஓ. தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இதன்பின்பு, மத்திய மந்திரி சிங், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.



Next Story