கவுன்சிலிங்கிற்காக வந்த சிறுமி பாலியல் பலாத்காரம்: பாதிரியார் போக்சோவில் கைது
கேரளாவில் கவுன்சிலிங்கிற்காக வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாதியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கூடலில் உள்ள புனித மேரி சிரியன் ஆர்த்தோடாக்ஸ் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் பாண்ட்சன் ஜான் என்பவர் 17-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக 12-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கல்வியில் பின்தங்கி இருந்ததால் சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்குவதற்காக பாதிரியாரிடம் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்ற பாதிரியார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழி மூலம் இந்த சம்பவம் சிறுமியின் ஆசிரியருக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பாதிரியார் மீது புகார் அளிக்கப்பட்டதையடுத்து பாதிரியார் இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் 3,4,7 மற்றும் 8 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story