2 ஆண்டுகளுக்கு பின் சோனாகாச்சியில் களை கட்டிய ஹோலி கொண்டாட்டம்


2 ஆண்டுகளுக்கு பின் சோனாகாச்சியில் களை கட்டிய ஹோலி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 9:07 AM IST (Updated: 18 March 2022 9:07 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சோனாகாச்சி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு பின் ஹோலி கொண்டாட்டங்கள் களை கட்டின.




கொல்கத்தா,



நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு இருந்தன.  கொரோனாவின் முதல் மற்றும் 2வது அலையால், பொதுமக்கள் பெரிதும் இடர்களை சந்தித்தனர்.  அரசின் பொது முடக்க அறிவிப்பினால், அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

எனினும், சமீப நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்புகள் சரிவை கண்டுள்ளன.  இதனால், பல்வேறு இடங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவால் கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு தொழில்களும் முடங்கின.  மேற்கு வங்காளத்தில் பாலியல் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சிவப்பு விளக்கு பகுதியாக சோனாகாச்சி உள்ளது.  கொரோனா ஊரடங்கால் எந்தவித பண்டிகை கொண்டாட்டங்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை.

இந்நிலையில், சோனாகாச்சியில் 2 ஆண்டுகளுக்கு பின் ஹோலி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.  இதுபற்றி தர்பார் மகிளா சாமன்வாயா குழுவின் தலைவரான விசாகா லஸ்கர் என்ற பாலியல் தொழிலாளர் கூறும்போது, பாலியல் தொழிலாளர்கள் வெளியே சென்று, மற்ற சமூகத்தினருடன் இணைந்து பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது. 

அதனால் ஒவ்வோர் ஆண்டும், சோனாகாச்சி சிவப்பு விளக்கு பகுதியில் பல்வேறு கொண்டாட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம்.  கொரோனாவால் 2 ஆண்டுகளாக பண்டிகையை கொண்டாட முடியவில்லை.  இந்த முறை ஹோலி கொண்டாடுவதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறியுள்ளார். 

இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள பாலியல் தொழிலாளரின் மகளான சங்கீதா பால் என்பவர் கூறும்போது, வண்ணங்களின் திருவிழா ஹோலி.  இந்த பண்டிகையை கொண்டாட, பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் உள்பட நாங்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம் என்று கூறியுள்ளார்.




Next Story