உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் நாளை மறுநாள் கர்நாடகா வந்தடையும் - பசவராஜ் பொம்மை
உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் நாளை மறுநாள் கர்நாடகா வந்தடையும் என்று கர்நாடகா முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 23 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி ரஷிய படையினர் உக்ரைன் மீது குண்டுவீசிய போது, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சலகேரியை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.
மாணவர் இறந்த செய்தி அறிந்ததும் பிரதமர் மோடி, கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர். அப்போது, மாணவரின் உடலை மீட்டு தாயகம் கொண்டுவரக்கோரி மாணவரின் பெற்றோர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
பாதுகாப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி, உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மாணவர் நவீனின் உடல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகாவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சேரும் என்று கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
Related Tags :
Next Story