கர்நாடகா: தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து; 4 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி...!
கர்நாடாகாவில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா - ஒய் ஒசக்கோட்டை இடையே தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரங்களில் இந்த பஸ் மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உட்பட 80 பயணிகளுடன் பஸ் சென்று உள்ளது.
மேலும், பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்சின் மேல் அமர்ந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த தனியார் பஸ் பாவகடா தாலுகா, பளவள்ளி டவுன் அருகே உள்ள ஏரி மீது சென்று கொண்டிந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது .
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 மாணவர்களும் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதனை அறிந்த சம்பவ இடத்துக்க வந்த போலீசார், பொதுமக்களின் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
அதனை அறிந்த மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினர்.
Related Tags :
Next Story