கேரளா: கால்பந்து மைதானத்தின் இருக்கைகள் சரிந்து விழுந்து விபத்து; 100 பேர் படுகாயம்...!


கேரளா: கால்பந்து மைதானத்தின் இருக்கைகள் சரிந்து விழுந்து விபத்து; 100 பேர் படுகாயம்...!
x
தினத்தந்தி 20 March 2022 12:18 PM IST (Updated: 20 March 2022 12:18 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கால்பந்து மைதானத்தின் இருக்கைகள் சரிந்து விழுந்த விபத்தில் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் காளிகாவ் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மரக்கட்டைகளால் ஆன இருக்கை திடீர் என்று சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் மைதானத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது,

இது தொடார்பாக போலீசார் கூறுகையில், 

காளிகாவ்நகரில் அகில் இந்தியா 7-வது கால்பந்து போட்டி இங்கு உள்ள ஒரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியை பார்த்து ரசிப்பதற்காக தினசரி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து செல்கிறார்கள். ரசிகர்கள் அமர்ந்து விளையாட்டை ரசிப்பதற்காக மைதானம் சுற்றிலும் மூங்கில் மற்றும் மர பலகைகளை கொண்டு இருக்கைகள் அமைத்துள்ளனர். முக்கியமான இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகள் நேற்று நடைபெற்றது.

இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர் போட்டிக்கு முன்னதாகவே மைதானத்துக்கு வந்துவிட்டனர். போட்டிகள் தொடங்கியது ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து ஆரவாரத்துடன் போட்டிகளை ரசிக்க தொடங்கினர்.

ஆப்போது திடீரென மைதானத்தின் இருக்கைகள் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் காயம் அடைந்தனர்.  இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மலப்புறம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு  காளிகாவ் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story