டெல்லியில் அதிகரிக்கும் வெப்பநிலை: காற்றின் தரமும் மோசம்


image credit: ndtv.com
x
image credit: ndtv.com
தினத்தந்தி 21 March 2022 12:57 AM IST (Updated: 21 March 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து கானப்படுகிறது.


புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று 38.3 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவானது. இது இயல்பை விட எட்டு டிகிரி அதிகமாகும். 

குறைந்தபட்ச வெப்பநிலையும் இயல்பை விட ஐந்து டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படுகிறது. டெல்லியில் வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 37 டிகிரி செல்சியஸ் மற்றும் 21 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

அதே போல் டெல்லியில் காற்றின் தரமும் மோசமான குறியீடாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி காற்றின் தரக் குறியீடு 242 ஆக பதிவாகியுள்ளது.


Next Story