உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலர்கள்...!


உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலர்கள்...!
x
தினத்தந்தி 21 March 2022 10:45 AM IST (Updated: 21 March 2022 10:54 AM IST)
t-max-icont-min-icon

சித்தூர் அருகே உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கள்ளக்காதலர்கள் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளனர்.

சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிபள்ளியை சேர்ந்த சிறுவன் உதய் கிரண் (வயது 8). இவர் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலிகிரி போலீசார் சிறுவனின் உடலை சோதனை செய்த போது கொலை செய்து தூக்கில் விட்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிறுவனின் உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சகாதேவன், ராஜேஸ்வரி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பல உண்மைகள் வெளிவந்துள்ளது. 

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

சகாதேவன் மற்றும் ராஜேஸ்வரி இவரும் கள்ளக்காதலர்கள் என்பது  போலீசார் விசாரணையில் தெரியவந்து. இவர்கள இருவரும் உல்லாசமாக இருந்ததை சிறுவன் உதய் கிரண் நேரில் பார்த்து உள்ளான். 
இதனால் அதிர்ச்சி அடைந்த கள்ளக்காதலர்கள், இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலர்கள் சிறுவனின் பிறப்பு உறுப்பு மீது சரமாரியாக தாக்கி பின்னர் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை யாருக்கும் தெரியாமல் நள்ளிரவு எடுத்துச் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மரத்தில் தொங்க விட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சகாதேவன் மற்றும்  ராஜேஸ்வரி மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். என்று தெரிவித்தார். 

Next Story