கோவா மாநில முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு


கோவா மாநில முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் தேர்வு
x
தினத்தந்தி 21 March 2022 6:46 PM IST (Updated: 21 March 2022 6:46 PM IST)
t-max-icont-min-icon

கோவா மாநில முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பானஜி,

கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜனதா புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரமோத் சாவந்த்  பாஜக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  

இதன் மூலம், கோவா மாநில முதல் மந்திரியாக பிரமோத் சாவந்த் மீண்டும் பதவியேற்க உள்ளார். சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்,  கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்து  பிரமோத் சாவந்த் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத்தெரிகிறது. 

Next Story