பிரதமர் மோடியை பகவந்த் மான் வரும் 24-ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல்


பிரதமர் மோடியை பகவந்த் மான் வரும் 24-ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 22 March 2022 11:34 PM IST (Updated: 22 March 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் வரும் 24-ம் தேதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அபாரமாக வெற்றிப் பெற்று காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டி ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட விழாவில் பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்றார்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வரும் 24-ம் தேதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை பகவந்த் மான் முதல்முறையாக சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு வரும் வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பஞ்சாப் முதல்-மந்திரியாகப் பதவியேற்ற பிறகு, மரியாதைக்குரிய சந்திப்பு மற்றும் பஞ்சாப் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் நேரம் கேட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Next Story