இந்தியா ரூ.30 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது - பிரதமர் மோடி
இந்தியா ரூ.30 லட்சம் கோடி அளவிற்கு ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது.
புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டில் இந்தியா30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி செய்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நாளை விட 9 நாட்கள் முன்னதாகவே இந்த இலக்கு நிறைவேறியுள்ளது.
இந்நிலையில், இந்த சாதனைக்கு தொழில்துறையினர், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
ரூ.30 லட்சம் கோடி அளவிற்கு, இந்தியா ஏற்றுமதியில் சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாற்றுச் சாதனை.
இந்தியாவின் ஏற்றுமதி சாதனைக்கு பேருதவி புரிந்திட்ட விவசாயிகள், நெசவாளர்களுக்கு நன்றி
இந்தியாவின் ஏற்றுமதி சாதனைக்கு பேருதவி புரிந்த சிறு,குறு தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்களுக்கு நன்றி. இந்தியாவின் ஏற்றுமதி சாதனைக்கு பேருதவி புரிந்த ஏற்றுமதியாளர்களுக்கும் நன்றி
"சுயசார்பு இந்தியா" என்ற இலக்குடன் கூடிய இந்தியாவின் பயணத்திற்கு ஏற்றுமதி சாதனை முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.
Related Tags :
Next Story