உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்


உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்
x
தினத்தந்தி 23 March 2022 4:11 PM IST (Updated: 23 March 2022 4:11 PM IST)
t-max-icont-min-icon

டேராடூனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்.

டேராடூன்,

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பக்வந்த் மான் பதவியேற்றார்.

அதே போல், பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் அடுத்தடுத்து பதவியேற்று வருகின்றனர். அந்த வகையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமி இன்று முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

உத்தரகாண்ட் கவர்னர் குர்மீத் சிங் அவருக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

Next Story