எரிபொருள் விலையேற்றம் தான் நாட்டின் உண்மையான பிரச்சினை! ‘ஹிஜாப் மற்றும் காஷ்மீர் பைல்ஸ்’ அல்ல; சஞ்சய் ராவத்


எரிபொருள் விலையேற்றம் தான் நாட்டின் உண்மையான பிரச்சினை! ‘ஹிஜாப் மற்றும் காஷ்மீர் பைல்ஸ்’ அல்ல; சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 24 March 2022 1:14 PM IST (Updated: 24 March 2022 1:14 PM IST)
t-max-icont-min-icon

எரிபொருள் விலை உயர்வு குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் மத்திய அரசை குற்றம் சுமத்தி பேசினார்.

மும்பை,

நாட்டில் எரிபொருள் விலை உயர்வு குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் மத்திய அரசை குற்றம் சுமத்தி பேசினார்.

நம் நாட்டில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவையே உண்மையான பிரச்சினைகள். ரஷியா-உக்ரைன் போர், 'தி காஷ்மீர் பைல்ஸ்' மற்றும் ஹிஜாப் பற்றிய சர்ச்சை போன்ற பிற விஷயங்கள் அவ்வளவு முக்கியமானவை அல்ல என்று அவர் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “எரிபொருள் விலை உயருகிறது... தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் விலையேற்றம் திரும்பியுள்ளது. இது பாஜகவின் விளையாட்டு. 

உண்மையான பிரச்சினை ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் அல்ல. உண்மையான பிரச்சினை ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படமோ அல்லது ஹிஜாப் விவகாரமோ அல்ல. 

வேலையில்லா திண்டாட்டமும் விலையேற்றமும் தான் நாட்டில் உண்மையான பிரச்சினைகளாக உள்ளன” என்றார்.

இதன்மூலம், பாஜகவை கடுமையாக விமர்சித்துவரும் சிவசேனா, நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக மத்திய அரசு, ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் மற்றும் ஹிஜாப் விவகாரங்களை பெரிதாக்கி மக்களை ஏமாற்றி வருகிறது என்று மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளது. 

Next Story