சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இந்தியா வந்தடைந்தார்


சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இந்தியா வந்தடைந்தார்
x
தினத்தந்தி 24 March 2022 9:28 PM IST (Updated: 24 March 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சீன வெளியுறவுத்துறை மந்திரி நாளை சந்திக்கிறார்.

புதுடெல்லி,

சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ டெல்லி வந்தடைந்தார்.

கிழக்கு லடாக்கில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சீன அதிகாரியின் முதல் உயர்மட்ட பயணமாக சீன வெளியுறவு மந்திரியின் பயணம் அமைந்துள்ளது.

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை வாங் யி, நாளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அவர், ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சியாளர்களைச் சந்திப்பதற்காக காபூலுக்கு செல்லும் பயணத்தை  நிறுத்திக்கொண்டார்.

Next Story