கொரோனா தொற்றுக்கு மத்தியில் மத்தியப் பிரதேசம் 19.7% வளர்ச்சி - முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மத்தியப் பிரதேசம் 19.7% வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளதாக முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்,
இது குறித்து மத்தியப் பிரதேசம் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-
இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மத்தியப் பிரதேசம் 19.7% வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம் ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் 2003 வரை ரூ.13,000 ஆக இருந்த தனிநபர் வருமானம் இன்று மாநிலத்தில் ரூ.1.24 லட்சமாக உயர்ந்துள்ளது.
போபால் மற்றும் இந்தூரில் பெண் தொழில்முனைவோருக்கான தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்படும். இதனால் பெண்கள் தொழில்முனைவில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவார்கள். மே 2ஆம் தேதி 'லாட்லி லட்சுமி திவாஸ்' அனுசரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 'லாட்லி லட்சுமி சம்மேளன்' நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஒரு வருடத்தில் 10 லட்சம் வீடுகளை கட்ட உள்ளோம், அதற்கு ரூ.10,0000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ஏழைகள் யாரும் தற்காலிக குடிசைகள் மற்றும் குடிசைகளில் வசிக்க மாட்டார்கள் என்பதை உறுதி செய்வோம்.
விவசாயிகளின் 6,000 கோடி ரூபாய் கடனை காங்கிரஸ் தள்ளுபடி செய்தது, அதில் பாதியை வங்கிகள் கட்டச் சொல்லி நாசம் செய்தது. கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.1.72 லட்சம் கோடியை அவர்களின் கணக்கில் செலுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story