’தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு எதற்கு வரிவிலக்கு ? வேண்டுமானால் யூடியூபில் போடுங்கள்- அரவிந்த் கெஜ்ரிவால்
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் வரிச்சலுகை வழங்கியுள்ளன.
புதுடெல்லி,
காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.
அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையில், காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் வரிச்சலுகை வழங்கியுள்ளன.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு புதுடெல்லியில் வரிவிலக்கு அளிக்கும்படி கோரிக்கை எழுந்தது . இதற்கு பதில் அளித்த அந்த மாநிலத்தின் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் " ஏன் எங்களிடம் வரிவிலக்கு கேட்கிறீர்கள்.
BJP wants #TheKashmirFiles to be tax free.
— AAP (@AamAadmiParty) March 24, 2022
Why not ask @vivekagnihotri to upload the whole movie on YouTube for FREE?
-CM @ArvindKejriwalpic.twitter.com/gXsxLmIZ09
அதை வரி விலக்கு செய்ய வேண்டிய என்ன ? அவ்வளவு ஆர்வமாக இருந்தால், படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியை அந்த திரைப்படத்தை யூடியூப்பில் போடச் சொல்லுங்கள். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும் " என தெரிவித்தார்.
Related Tags :
Next Story