கர்நாடகா: 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்: 8 பேர் படுகாயம்...!


கர்நாடகா: 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பஸ்: 8 பேர் படுகாயம்...!
x
தினத்தந்தி 25 March 2022 2:50 PM IST (Updated: 25 March 2022 2:50 PM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அருகே 50 அடி பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு சந்திர திருகோணமலை பகுதியில் தத்தா பீடம் பாபாபுடங்கிரி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்து கொண்டு 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனை அறிந்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் சுமார் 50 அடி பள்ளத்தில் கிடந்த பஸ்சுக்குள் சிக்கியிருந்தவர்ளை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

மலை பகுதியில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 4 வயது குழந்தை உட்பட 8 பேர் படுகாயம்  அடைந்து உள்ளனர்.  அதிர்ஷ்டவசமாக  பஸ்சில் குறைவான பயணிகள் இருந்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.


Next Story