உத்தர பிரதேசத்தின் முதல்-மந்திரியாக 2-வது முறையாக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்


உத்தர பிரதேசத்தின் முதல்-மந்திரியாக 2-வது முறையாக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 25 March 2022 4:37 PM IST (Updated: 25 March 2022 4:37 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இன்று யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார்

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.

இந்நிலையில்  உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இன்று  யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார் . யோகி ஆதித்யநாத்துக்கு கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் .

லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். 

Next Story