கழிவுநீர் தொட்டியில் விழுந்து மாற்றுத்திறனாளி பெண் அரசு ஊழியர் பலியான சம்பவம் - ரூ. 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


கழிவுநீர் தொட்டியில் விழுந்து மாற்றுத்திறனாளி பெண் அரசு ஊழியர் பலியான சம்பவம் - ரூ. 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 26 March 2022 12:11 AM IST (Updated: 26 March 2022 12:11 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த வேளாண் துறை பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஓரிக்கை வேளிங்கப்பட்டரை ஆசிரியர் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சரண்யா (வயது 24). மாற்றுத்திறனாளியான இவர் காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூரில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இதற்கிடையில், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி சரண்யா களக்காட்டூரில் உள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அந்த மையத்தில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அப்போது அங்குள்ள பாதி கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருந்த கழிவு நீர் தொட்டியின் மீது கால் வைத்த போது ஓடு உடைந்து சரண்யா கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரண்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், இந்த மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி ஊழியர் சரண்யாவின் குடும்பத்திற்கு 13 லட்ச ரூபாய் இழபீடு வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Next Story