ஆட்சிப்பொறுப்பேற்ற பின் எத்தனை பண்டிட்டுகளை பாஜக காஷ்மீரில் மறு குடியமர்த்தியுள்ளது? - கெஜ்ரிவால் கேள்வி
ஆட்சிப்பொறுப்பேற்ற பின் எத்தனை பண்டிட்டுகளை பாஜக காஷ்மீரில் மறு குடியமர்த்தியுள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படம் குறித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து குறித்த கேள்வி மற்றும் பாஜகவின் விமர்சனம் குறித்து பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால், கூறியதாவது:-
கடந்த 25 ஆண்டுகளில், காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறியதில் இருந்து, கடந்த 8 ஆண்டுகள் உட்பட 13 ஆண்டுகளாக மத்தியில் பாஜக அரசு உள்ளது. இந்த காலகட்டத்தில் எத்தனை காஷ்மீரி பண்டிட்டுகளின் குடும்பத்தை பாஜக மறு குடியமர்த்தியுள்ளது? ஒரு குடும்பம் கூட காஷ்மீருக்கு திரும்பவில்லை. காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" சுமார் ரூ. 200 கோடி சம்பாதித்துள்ளது. ஒருவரின் சோகத்தை வைத்து பாஜக பணம் சம்பாதிக்கிறது. இது ஒரு குற்றம், இதை நாடு பொறுத்துக்கொள்ளாது என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது. காஷ்மீர் பண்டிட்டுகளின் நிலையை நாடு முழுவதும் புரிந்துகொள்ளும் வகையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தை காஷ்மீரி பண்டிட்டுகளின் நலனுக்காக செலவிட வேண்டும் என்று பட்ஜெட்டுக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
Related Tags :
Next Story