மதரசா பள்ளிகளை மூட வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
கர்நாடகத்தில் மதரசா பள்ளிகளை மூட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கோவில் வாசலில்களில் இஸ்லாமியர்கள் கடை போடக்கூடாது என கோவில் நிர்வாகங்கள் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாவணகரே மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ.வும், கர்நாடக முதல்-மந்திரியின் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யா, மதரசா பள்ளிகளில் அப்பாவி மாணவர்களிடையே தேச விரோத பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், வன்முறையை தூண்டும் பாடம் கற்பிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே மதரசா பள்ளிகளை தடை செய்ய வேண்டும் என கர்நாடக முதல்-மந்திரி மற்றும் கல்வி மந்திரியிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story