மக்களவையில் இன்று குற்றவியல் நடைமுறை மசோதா தாக்கல்!


மக்களவையில் இன்று குற்றவியல் நடைமுறை மசோதா தாக்கல்!
x
தினத்தந்தி 28 March 2022 9:05 AM IST (Updated: 28 March 2022 9:05 AM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022ஐ அறிமுகப்படுத்துகிறார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022ஐ அறிமுகப்படுத்துகிறார்.

குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவானது, குற்றவியல் விவகாரங்களில் அடையாளம் காணுதல், விசாரணை மற்றும் பதிவுகளைப் பாதுகாப்பதற்காக, குற்றவாளிகளின் அளவீடுகளை காவல்துறைக்கு வழங்குவதை  அங்கீகாரம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்கள்  ஆகியோரின் கை விரல் மற்றும் கால் தடம் ஆகிய பதிவுகள் மற்றும் புகைப்படங்களை மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், இந்த புதிய மசோதாவின் விதிகளின்படி, எந்தவொரு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட குற்றவாளி அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும், ஒரு போலீஸ் அதிகாரிக்கு கை விரல், கால் தடம் போன்ற பதிவுகளை வழங்க வேண்டும்.

புதிய மசோதாவானது, தற்போதுள்ள ''கைதிகளை அடையாளப்படுத்தும் சட்டம், 1920''ஐ ரத்து செய்யும். 

மேலும், குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்கள்  ஆகியோரின் "கைவிரல்-பதிவுகள், உள்ளங்கை-அச்சு பதிவுகள், கால்தடம் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல், உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள், கையெழுத்து அல்லது வேறு ஏதேனும் ஆய்வுகள்” உட்பட நடத்தை பண்புகளை சேகரிக்க இந்த மசோதா அனுமதிக்கிறது. 

Next Story