8 பேர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம்: உள்துறை மந்திரி அமித்ஷா - மேற்குவங்காள கவர்னர் சந்திப்பு
உள்துறை மந்திரி அமித்ஷாவை மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்கர் இன்று சந்தித்தார்.
டெல்லி,
மேற்குவங்காள மாநிலம் பீர்ப்ஹம் மாவட்டம் ராம்பூர்கட் என்ற பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பகது ஷேக் என்பவர் கடந்த 21-ம் தேதி கொல்லப்பட்டார்.
இதனால், அவரது தரப்பு ஆதரவாளர்கள் பக்டூய் கிராமத்தில் சேர்ந்த 8 பேரை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.
திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பகது ஷேக் மற்றும் சோனா ஷேக் என்பவர்களுக்கு இடையேயான மோதலில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து மேற்குவங்காளத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவை மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்கர் இன்று சந்தித்தார். டெல்லியில் உள்துறை மந்திரி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது மேற்குவங்காளத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை, சட்டம்-ஒழுங்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கவர்னரிடம் உள்துறை மந்திரி கேட்டறிந்தார்.
மேலும் படிக்க... மேற்குவங்காளம்: 8 பேர் எரித்துக்கொலை - வெளியான திடுக்கிடும் தகவல்
Related Tags :
Next Story