முககவசமா...! தாடியா...? சுரேஷ் கோபியிடம் கேட்ட வெங்கையா நாயுடு...!


முககவசமா...! தாடியா...? சுரேஷ் கோபியிடம் கேட்ட வெங்கையா நாயுடு...!
x
தினத்தந்தி 28 March 2022 4:12 PM IST (Updated: 28 March 2022 4:12 PM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எம்பி சுரேஷ் கோபியிடம் கேட்ட நகைச்சுவையான கேள்வி வைரலாகி வருகிறது.

புதுடெல்லி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவையில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அது போல் மாநிலங்களவையிலும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களவையில் பாஜகவை சேர்ந்த நியமன எம்.பி.யான சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் பேசினார்.

அப்போது அவரை பார்த்த வெங்கையா நாயுடு  நகைச்சுவையாக  கேட்ட கேள்வியும் அதற்கு சுரேஷ் கோபி கூறிய பதிலும் வைரலாகி வருகிறது. சுரேஷ் கோபி பேச முற்படும் போது "நீங்கள் முகக் கவசம் அணிந்துள்ளீர்களா, அல்லது அது தாடியா என கேட்டுள்ளார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

சுரேஷ் கோபியும் சிரித்துக் கொண்டே சார் இது தாடிதான், என்னுடைய புதிய படத்திற்கான புதிய லுக் என கூறினார். இந்த பதிலால் திருப்தி அடைந்த வெங்கையா நாயுடு, சுரேஷ் கோபி தனது பேச்சை தொடருமாறு கூறினார். பின்னர் தனது பேச்சை அவர் தொடர்ந்தார்.


Next Story