ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி விரைவில் இந்தியா வருகை?


Photo Credit : AFP
x
Photo Credit : AFP
தினத்தந்தி 28 March 2022 4:15 PM GMT (Updated: 28 March 2022 4:15 PM GMT)

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லவ்ரோவ் அடுத்த ஒருவாரத்திற்குள் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லவ்ரோவ் அடுத்த ஒருவாரத்திற்குள் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷிய போர் தொடுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. 

இதனால்,  ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்கும் விவகாரத்தில் எந்த பண மதிப்பில்  இருநாடுகளும் வர்த்தகம் செய்யும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.  எனினும், இந்தப் பயணம் குறித்த இருநாடுகள் தரப்பிலும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

உக்ரைன் - ரஷியா போர் நீடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு வெளிநாடுகளின் முக்கிய அதிகாரிகள் வருகை அதிகரித்துள்ளது. அண்மையில் சீன வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை தந்தார். அதேபோல், அமெரிக்காவின் அரசியல் விவகாரங்கள் குழு செயலர் விக்டோரியா நுலாண்ட் மற்றும் ஆஸ்திரியா, கிரீஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் அடுத்தடுத்து வருகை தந்தனர். பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி வரும் வியாழக்கிழமை இந்தியா வருகை தர உள்ளார். 


Next Story