சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் பயங்கர தீ : விமானப்படை மூலம் அணைக்கும் பணி தீவிரம்
சரிஸ்கா தேசிய புலிகள் சரணாலயத்தில் ஏற்பட்டுள்ள தீயை விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜெய்பூர்,
ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ளது சரிஸ்கா தேசிய புலிகள் சரணாலயம். சுமார் 10 சதுர கிலோ. மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட புலிகள் வசிப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. புலிகளை தவிர செந்நாய்கள், சிறுத்தை புலிகள், காட்டுப்பூனைகள், ஓநாய்கள் ஆகியவை வசிக்கின்றன.
1,800 கால்பந்து மைதானங்கள் உள்ளடக்கக் கூடிய அளவுக்கு பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் அப்பகுதியில் புகை மூட்டமும் காணப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாக நீர் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது. எஸ்.டி-17 என்ற பெயர் கொண்ட புலி ஒன்று அப்பகுதியில் தனது குட்டிகளுடன் உலவியது.
இதனால், அந்தப் புலி தற்போது எங்கு உள்ளது என்பதை வன உயிரியல் ஆர்வலர்கள் தேடி வருகின்றனர். கடுமையான தீ விபத்தால், புலிகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிட்தனர். தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. அருகாமையில் உள்ள கிராம மக்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story