இந்தியாவில் வங்கி மோசடியால் தினமும் ரூ.100 கோடி இழப்பு.! அதிர்ச்சி தகவல்கள்
கடந்த 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் ரூ. 2.50 லட்சம் கோடி அளவிற்கு வங்கி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் வங்கி மோசடிகளால், தினமும் ரூ. 100 கோடி வரை வங்கித்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.
அதாவது, ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2022 வரை 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் ரூ. 2.50 லட்சம் கோடி அளவிற்கு வங்கி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2015 முதல் 2016 வரை ரூ. 67,760 கோடியும், 2016 முதல் 2017 வரை ரூ.59,596 கோடியும், இழப்பு ஏற்பட்டுள்ளது. 2019 முதல் 2020 வரை ரூ.29,689 கோடியாக இருந்த இழப்பு, 2020 முதல் 2021 வரை ரூ.10,699 கோடியாக குறைந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இது ரூ.64709 கோடியாக உள்ளது. போலி செக்குகள், போலி டிராப்டுகள் மூலம் பணம் எடுத்தல், லஞ்சம் கொடுத்து வங்கிக்கடன்களை முறைகேடாக பெறுதல். அந்நிய செலாவணி பணப்பரிவர்த்தனைகளில் முறைகேடுகள், வங்கியில் உள்ள ரொக்கப்பணத்தில் குளறுபடிகள், பொய் கணக்குகள் மூலம் கடன் பெறுதல், அடமான சொத்துக்களை போலி ஆவணம் மூலம் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பல்வேறு முறைகளில் வங்கி மோசடிகள் நடைபெறுள்ளன.
முறைகேடுகள் மூலம் ஏற்பட்ட இழப்புகளில், 83 சதவீதம் மராட்டியம், டெல்லி, குஜராத், தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் நடந்தேறியுள்ளன. இதில் 50 சதவீத முறைகேடுகள் மட்டும் நிதித்துறை தலைமையகமான மும்பையை உள்ளடக்கிய மராட்டியத்தில் நடைபெற்றுள்ளன.
வங்கி முறைகேடுகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளையும், உடனுக்குடன் கண்டறியும் வழிமுறைகளையும் அமல்படுத்தியதல் மூலம் வங்கி முறைகேடுகளை வகுவாக கட்டுப்படுத்தியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story