பெட்ரோல் விலையை உயர்த்துவது மோடியின் தினசரி பணியாகிவிட்டது: ராகுல் காந்தி பாய்ச்சல்


பெட்ரோல் விலையை உயர்த்துவது மோடியின் தினசரி பணியாகிவிட்டது: ராகுல் காந்தி பாய்ச்சல்
x
தினத்தந்தி 30 March 2022 3:45 PM IST (Updated: 30 March 2022 3:45 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக தினசரி உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை திண்டாட வைத்துள்ளது.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது பிரதமர் மோடியின் தினசரி பணியாகிவிட்டது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.   நாட்டி கடந்த சில பெட்ரோல்,டீசல் விலை தினசரி உயர்ந்து வருகிறது. 

கடந்த 9  தினங்களில் மட்டும் ரூ.5.60 - பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. தினசரி விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையையும் உயர வழிவகுக்கும் என்பதால்,  பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர். 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் தினசரி செய்ய வேண்டிய பணிகள் பட்டியலில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்துவது மற்றும் மக்களின் செலவினங்கள் குறித்த விவாதத்தை எப்படி நிறுத்துவது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றிய வெற்றுக் கனவுகளை எப்படிக் காட்டுவது? எந்த பொதுத்துறை நிறுவனத்தை விற்கலாம். விவசாயிகளை எப்படி மேலும் ஆதரவற்றவர்களாக ஆக்குவது? என்பவையே இடம் பெற்றுள்ளது” என ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் விமர்சித்துள்ளார். 

Next Story