நாடாளுமன்றத்துக்கு ஹைட்ரஜன் காரில் வருகை தந்த மத்திய மந்திரி
மத்திய மந்திரி நிதின் கட்கரி நாடாளுமன்றத்துக்கு ஹைட்ரஜன் காரில் வந்தார்.
புதுடெல்லி,
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்து, அதை வாகன எரிபொருளாக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில், டயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் அதிநவீன மின்சார காரை தயாரித்துள்ளது.
‘டயோட்டா மிராய்’ என்ற இந்த காரை சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி அறிமுகப்படுத்தினார். இந்தநிலையில், நேற்று அவர் டயோட்டா மிராய் காரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். தூய்மையான எரிசக்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், அவர் அந்த காரில் பயணம் செய்தார்.
Related Tags :
Next Story