இந்திய பங்குச்சந்தை நிலவரம்; சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்வு!


இந்திய பங்குச்சந்தை நிலவரம்; சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்வு!
x
தினத்தந்தி 31 March 2022 10:34 AM IST (Updated: 31 March 2022 10:34 AM IST)
t-max-icont-min-icon

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17,547 புள்ளிகளாக உள்ளது.

மும்பை,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து ரஷியா மீது பல்வேறு நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பங்குசந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில், இன்று  சென்செக்ஸ் 16.66 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 14.10 புள்ளிகள் உயர்ந்தும் காணப்படுகின்றன.

இன்று காலை 9.25 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16.66 புள்ளிகள் உயர்ந்து, 0.03 சதவீதம் அதிகரித்து 58,700.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.10 புள்ளிகள் உயர்ந்து, 0.08 சதவீதம் அதிகரித்து 17,512.40 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

தற்போதைய நிலவரப்படி, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 17,547 புள்ளிகளாக உள்ளது. சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்து 58,868 புள்ளிகளில்  வர்த்தகமாகிறது.

Next Story