சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.
போபால்,
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் மாவட்டம் சுபாஷ் நகரை சேர்ந்த நபர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிடம் சாக்லெட் வாங்கித்தருவதாக கூறி அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் மீது போச்கோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அந்த குற்றவாளியில் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியில் வீட்டிற்கு புல்டோசருடன் சென்ற அதிகாரிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர்.
வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த குற்றவாளியின் உறவினர்களையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story