2 ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களுக்கு நிகரான விலையில் மின்சார வாகனங்கள் - நிதின் கட்கரி


கோப்புப் படம் PTI
x
கோப்புப் படம் PTI
தினத்தந்தி 31 March 2022 6:18 PM IST (Updated: 31 March 2022 6:18 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 2 ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களுக்கு நிகரான விலையில் மின்சார வாகனங்கள் இருக்கும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு நிகராக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார்.

மக்களவை சபாநாயகரிடம் பாராளுமன்ற வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிதின் கட்கரி, அவ்வாறு சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால் எம்.பி.க்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும் என்று கூறினார். மேலும் அவர், ஒவ்வொரு அரசு வளாகத்திலும், பார்க்கிங் அமைப்பில் மின்வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதியை வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.

மாற்று எரிபொருள் தேசிய தலைநகர் டெல்லியின் மாசு அளவைக் குறைக்கும் என்று கூறிய அவர், இறக்குமதி மாற்று, குறைந்த செலவில் அதிக செயல்திறன், மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவையே அரசின் கொள்கை என்று குறிப்பிட்டார்.

மேலும் நிதின் கட்கரி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். நாம் ஏற்கனவே நிலைமையைப் பார்த்திருக்கிறோம். எனவே, இதுதான் ஒரே மாற்று எரிபொருள். அதாவது, கிரீன் ஹைட்ரஜன், மின்சாரம், எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ-எல்என்ஜி மற்றும் பயோ-சிஎன்ஜி. அந்த திசையில் நாம் செயல்படுவோம் என்று கூறினார்.

Next Story