நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு!
நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்து பொருட்களின் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 10.7 சதவீதம் விலை உயர்த்தப்படும் என்று இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்து இருந்தது.
இதன்படி, வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. அத்தியாவசிய மருந்து பட்டியலில் உள்ள பாராசிட்டமால், பாக்டீரியா தொற்று தடுப்பு மருந்துகள், ரத்தசோகை எதிர்ப்பு மருந்துகள், ஸ்டீராய்டுகள் உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், புற்றுநோய், நீரழிவு எதிர்ப்பு நோய், இரத்த அழுத்தம், தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகளின் விலை 10.7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story