இமாச்சல பிரதேசத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 April 2022 6:10 PM IST (Updated: 1 April 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

முகக்கவசம் அணிவது, கை கழுவுதல் ஆகியவை தவிர்த்து அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.


சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகளை திரும்ப பெற இமாச்சல அரசு முடிவுசெய்துள்ளது.

எனினும், மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் முதலியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநிலத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. 


Next Story