டெல்லி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்


டெல்லி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்
x
தினத்தந்தி 2 April 2022 11:02 AM IST (Updated: 2 April 2022 11:02 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி பூங்காவில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

புதுடெல்லி,

தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். 

அவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார்.

இதனை தொடர்ந்து பயணத்தின் 3-வது நாளான நேற்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார்.

இந்நிலையில், டெல்லி பயணத்தின் இறுதி நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரு பூங்காவில் காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மக்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதனிடையே, டெல்லியில் திமுக அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story