டெல்லியில் பிரதமர் மோடியை நேபாள பிரதமர் நேரில் சந்தித்து பேசினார்


டெல்லியில் பிரதமர் மோடியை நேபாள பிரதமர் நேரில் சந்தித்து பேசினார்
x
தினத்தந்தி 2 April 2022 12:49 PM IST (Updated: 2 April 2022 12:49 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேபாள பிரதமர் இன்று நேரில் சந்தித்து பேசினார்.


புதுடெல்லி,

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன்படி டெல்லி வந்து சேர்ந்த அவர் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை இன்று சந்தித்து பேசுகிறார்.  இதுதவிர பிற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.  உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகருக்கும் அவர் செல்கிறார்.  பா.ஜ.க.வின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்து பேசுகிறார்.

இந்த நிலையில், நேபாள பிரதமர் டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  இதன் பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசி வருகிறார்.  வருகிற 3ந்தேதி வரை நேபாள பிரதமர் தூபா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்காள்கிறார்.

இந்தியாவுக்கு அவர் வருகை தருவது என்பது முன்பே திட்டமிடப்பட்ட பயணம் ஆகும்.  இந்த பயணத்தில், இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.




Next Story