தேசிய மகளிர் ஆணையத்தால் புதிதாக மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு தொடக்கம்!
தேசிய மகளிர் ஆணையம் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவை தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
பெண்கள் மற்றும் சிறுமிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மனிதக் கடத்தல் தொடர்பான வழக்குகளை இன்னும் திறம்பட கையாள்வதற்காகவும், மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவை தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியுள்ளது.
சட்ட அமலாக்க அலுவலர்கள் இடையே அதிகளவு விழிப்புணர்வை ஏற்படுத்தவதும் அவர்களது திறனை வளர்ப்பதும் இந்த பிரிவின் நோக்கமாகும்.
இதன்மூலம், காவல் அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளிடையே பிராந்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பாலியல் விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்படும்.
மேலும், மனிதக் கடத்தலை தடுப்பதற்கான பயிலரங்குகளையும் இந்த மையம் நடத்தும். மனிதக் கடத்தல் தொடர்பாக ஆணையம் பெறும் புகார்களை இந்தப் பிரிவு கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு மற்றும் அவர்களது குடும்பம் குறித்த சமூகத்தின் பார்வை ஆகியவை முக்கிய பிரச்சினைகள் என்று ஆணையம் கருதுகிறது. எனவே, இது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, கடத்தலில் இருந்து மீண்டவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகளிலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல் தடுப்புப் பிரிவுகளின் திறன் வளர்த்தல் மற்றும் பயிற்சிக்காகவும், சட்ட அமலாக்க முகமையின் எதிர்வினைகளை மேம்படுத்துவதற்காகவும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவை தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story