மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை நீக்க வேண்டும் - சர்ச்சை பேச்சுக்கு சஞ்சய் ராவத் பதிலடி!


மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை நீக்க வேண்டும் - சர்ச்சை பேச்சுக்கு சஞ்சய் ராவத் பதிலடி!
x
தினத்தந்தி 3 April 2022 2:36 PM IST (Updated: 3 April 2022 2:36 PM IST)
t-max-icont-min-icon

ராஜ் தாக்கரேவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடி தரும் விதத்தில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதில் அளித்துள்ளார்.

மும்பை,

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கலந்துகொண்டார். 

அப்போது பேசிய அவர், “மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஒலிக்கப்படுகின்றன..? இதை நிறுத்தாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் ஹனுமான் சாலிசாவை ஒலிபெருக்கிகள் ஒலிக்கும்.” என்று ராஜ்தாக்ரே தெரிவித்தார். 

இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடி தரும் விதத்தில், மராட்டிய மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில்,  “மராட்டிய மாநிலத்தில் சட்டப்படி தான்  நடக்கும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த உள்துறை மந்திரி சட்டப்படி அனைத்தையும் செய்வார்.இன்னும் சட்டம் நடைமுறையில் இருக்கும் மாநிலம் மராட்டியம் ஆகும்.

இது பாஜக நிகழ்ச்சி என்று மக்கள் நினைத்தனர். பாஜக ஆளும் எந்த மாநிலத்தில் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன” என்று கேள்வி எழுப்பினார்.

Next Story