கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியாக உயர்வு..!!
கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2021-2022 நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதியை 400 பில்லியன் டாலராக (ரூ.30 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நிதி ஆண்டு முடிவடைவதற்கு 9 நாட்கள் இருக்கும்போதே கடந்த மாதம் 23-ந் தேதி இந்த இலக்கு எட்டப்பட்டது.
கடந்த நிதி ஆண்டு முடிந்தநிலையில், ஏற்றுமதி 418 பில்லியன் டாலராக (ரூ.31 லட்சத்து 35 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள், என்ஜினீயரிங் பொருட்கள், நகை மற்றும் ரத்தினங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகமாக இருந்ததே இதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Related Tags :
Next Story