இலவச திட்டங்கள்: இலங்கை போல் இந்திய மாநிலங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் மோடிக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
இலவச திட்டங்களால் இலங்கை போல் இந்திய மாநிலங்கள் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என பிரதமருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் 4 மணி நேரம் நடைபெற்றது.
அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார்.பெரிய வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவராத்தற்கு "வறுமையை" ஒரு சாக்காகக் கூறும் பழைய கதையை விட்டுவிடுமாறு அவர் அவர்களிடம் கூறினார்.
துறை செயலர்கள் இந்திய அரசின் செயலாளர்களாக செயல்பட வேண்டும், அந்தந்த துறைகளின் செயலர்களாக மட்டும் செயல்படாமல் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என கூறினார்.
கூட்டத்தில் ஒரு சில அதிகாரிகள் பல மாநிலங்கள் அறிவித்த இலவச திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்தனர், அவை பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை என்றும் இத்திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதை போல் பொருளாதார நெருக்கடி அந்தந்த மாநிலங்களில் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story