ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம்: ரூ.27 லட்சம் பறிமுதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 April 2022 3:13 PM IST (Updated: 4 April 2022 3:13 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது அவர்கள் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.

புனே,

மராட்டிய மாநிலம் புனே நகரில்  காலேவாடி பகுதியில், ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சோதனை நடத்திய போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கும்பல் சனிக்கிழமை இரவு பிடிபட்டது.போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். போலீசார் விரட்டி சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடினார். 

டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது அவர்கள் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.அவர்களிடம் இருந்து 8 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story