பொதுமக்களை அச்சுறுத்திய உலோக பொருட்கள் சீன ராக்கெட்டின் பாகங்களா...? இஸ்ரோ தகவல்


பொதுமக்களை அச்சுறுத்திய உலோக பொருட்கள் சீன ராக்கெட்டின் பாகங்களா...? இஸ்ரோ தகவல்
x
தினத்தந்தி 4 April 2022 3:38 PM IST (Updated: 4 April 2022 3:38 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கிராமத்தில் விழுந்த 2 உலோக பொருட்கள் சீன ராக்கெட்டின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.



சந்திராப்பூர்,


மராட்டியத்தின் சந்திராபூரில் சிந்தேவாஹி தாலுகாவுக்கு உட்பட்ட லட்போரி மற்றும் பவன்பூர் கிராமங்களில் கடந்த சனிக்கிழமை இரவு 2 உலோக பொருட்கள் வந்து பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளன.  இதனால், கிராமவாசிகள் அச்சமடைந்து ஓடி தங்களது வீட்டுக்குள் இருந்துகொண்டனர்.  அரை மணிநேரம் வரை வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என்றும் ஒரு சிலர் தெரிவித்து உள்ளனர்.

அந்த பொருட்களில், 3 மீட்டர் சுற்றளவு (10க்கு 10 அடி) கொண்ட வளையம் ஒன்று இருந்துள்ளது.  இதேபோன்று, கோள வடிவிலான மற்றொரு பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி சிந்தேவாஹியின் தாசில்தார் கணேஷ் ஜக்டேல் கூறும்போது, அந்த வளையம் சூடாக இருந்துள்ளது.  வானத்திலிருந்து விழுந்தது போல் தோன்றியது என கூறியுள்ளார்.

நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் இருந்து விண்கற்கள் மழை பொழிந்தது போன்ற காட்சிகள் வீடியோவுடன் வெளிவந்தது.  இதேபோன்று, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திலும் தொடர்ச்சியாக பொருட்கள் ஒளிர்ந்து கொண்டே வந்த காட்சியை பார்த்தோம் என மக்கள் கூறியுள்ளனர்.

இதுபற்றி இஸ்ரோ அதிகாரிகள் கூறும்போது, அமெரிக்கா விண்வெளி மைய எச்சரிக்கையின்படி, விண்வெளியில் இருந்து 4 குப்பை பொருட்கள் (ராக்கெட், செயற்கைக்கோள் உள்ளிட்டவற்றின் உடைந்த பாகங்கள்) புவியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அவை சீனாவின் சி.இசட்-3பி ஆர்/பி என்ற ராக்கெட், ஸ்டார்லிங் 1831 மற்றும் செயற்கைக்கோள்கள் மோதி கொண்டதில் ஏற்பட்ட, கோஸ்மோஸ் மற்றும் இரிடியம் ஆகிய 2 சிறிய பொருட்களின் மீதம் ஆகியவை என்று தெரிவித்திருந்தது.

பூமியின் அட்ச மற்றும் தீர்க்க ரேகை பற்றிய ஒரு சிறிய தவறான ஆய்வு முடிவு கூட, பல கி.மீ. தொலைவுக்கு அந்த பொருட்கள் வந்து விழ கூடிய வேற்றுமையை ஏற்படுத்தி விடும் என்று அவர் கூறியுள்ளார்.  இதில், ஸ்டார்லிங் 1831 தெற்கு அட்லாண்டிக் கடலில் விழும் என்று முன்பு கணிக்கப்பட்டு உள்ளது.  2 சிறிய பொருட்களின் மீதம் இந்தியாவின் தரையில் வந்து விழுந்ததற்கான தடம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story