மக்கள் மீது பாஜக விலைவாசி உயர்வு போரை தொடங்கியுள்ளது - குமாரசாமி


மக்கள் மீது பாஜக விலைவாசி உயர்வு போரை தொடங்கியுள்ளது - குமாரசாமி
x
தினத்தந்தி 5 April 2022 12:55 AM IST (Updated: 5 April 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் மீது பா.ஜனதா விலைவாசி உயர்வு போரை தொடங்கியுள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி விமர்சித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதாவின் விலைவாசி உயர்வின் கொடூரம் தொடர்ந்து வருகிறது. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. அத்துடன் தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாத அரசுக்கு மக்களிடம் பணம் பறிப்பதே தொழிலாகிவிட்டது. 
தரமான மின்சாரத்தை வழங்க முடியாத அரசு, கட்டணத்தை உயர்த்துவதில் மட்டும் ராக்கெட் வேகத்தில் செயல்படுகிறது. 

ஏழை மக்கள் வீடுகளை கட்ட முடியாது. வயிறு நிறைய சாப்பிட முடியாது. ஏழைகள் தற்போது வெளிச்சத்திலும் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகளுக்கு எதிராக பா.ஜனதா விலைவாசி உயர்வை போரை தொடங்கியுள்ளது.

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். மின்வெட்டை அகற்றி மக்களுக்கு தரமான மின்சாரத்தை வழங்க வேண்டும். 

இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

Next Story