இந்திய-சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 6 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு; மத்திய அரசு தகவல்


இந்திய-சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 6 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு; மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 5 April 2022 7:01 PM IST (Updated: 5 April 2022 7:01 PM IST)
t-max-icont-min-icon

சீன எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்த கடந்த நிதியாண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 6 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மார்ச் 14ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதி,  ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைகிறது. லோக்சபாவில் இன்று,  வடகிழக்கு சர்வதேச எல்லை பகுதிகளில், கடந்த 3 வருடங்களில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து எம்.பி திலீப் சைக்கியா கேள்வி எழுப்பினார். 

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சீன-இந்திய எல்லையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஆறு மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என்று  மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
 
மக்களவையில் இன்று  மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;-

“லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான 3,488 கிமீ நீளமான கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) சீனாவுடன் இந்தியா பகிர்ந்து கொள்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சீன-இந்திய எல்லையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஆறு மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.

சீன எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்த கடந்த நிதியாண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 6 மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2021-22ல் ₹602.30 கோடியும், 2020-21ல் ரூ.355.12 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கில்,சீனா, மியான்மர் மற்றும் பங்களாதேஷ் உடன் சர்வதேச எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை (பிஐஎம்) திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21ல் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்தியா-சீனா எல்லைக்கு ₹42.87 கோடியும், 2021-22ல் ரூ.249.12ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ல் ₹42.87 கோடியிலிருந்த இந்த நிதி ஒதுக்கீடு, 2021-22ல் ₹249.12 ஆக உயர்த்தப்பட்டது.

2020-21ல் இந்தியா-மியான்மர் எல்லைக்கு ₹17.38 கோடியும், 2021-22ல் ₹50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21ல் இந்தியா-வங்கதேச எல்லைக்கு ₹294.87 கோடியும், 2021-22ல் ₹303.18 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த அரசு பல முனை அணுகுமுறையை கடைபிடித்துள்ளது. 

எல்லைப் பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துதல், புதிய எல்லைப் புறக்காவல் நிலையங்களை நிறுவுதல், கண்காணிப்புக் கருவிகளைப் பயன்படுத்துதல், உளவுத்துறை வலையமைப்பை வலுப்படுத்துதல், எல்லையில் வேலி அமைத்தல் போன்ற பன்முக அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றுகிறது.”

இவ்வாறு எழுத்துப்பூர்வமாக  அளித்த பதிலில் அவர் தெரிவித்தார். 

அருணாச்சலப் பிரதேசம் சீனாவுடன் 1,126 கிமீ நீள எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.ஏப்ரல் 2020 முதல் லடாக்கில் இந்திய ராணுவமும் சீனாவின் பிஎல்ஏவும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story