5ஜி பயன்பாடு சோதனைக்கு அனுமதி - மத்திய மந்திரி
5ஜி பயன்பாட்டிற்கான சோதனை நடத்துவதற்கு அனுமதி வழங்குவதாக மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
5ஜி பயன்பாட்டிற்கான சோதனை நடத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மத்திய இணை மந்திரி தேவுசிங் சவுகான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக மக்களவையில் பதிலளித்த அவர், 5ஜி பயன்பாட்டிற்கான சோதனை நடத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறினார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட புதுமைகளை புகுத்தும் நோக்கில் 6ஜி பற்றி ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழுவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story