நாடு முழுவதும் 22 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் 22 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது பல்வேறு சட்டங்களின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
போலீஸ் அதிகாரிகள் மீதான வழக்குகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்படி கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 22 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது பல்வேறு சட்டங்களின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன’ என்று தெரிவித்தார்.
2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் போலீசாரிடையே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்த நித்யானந்த் ராய், உத்தரபிரதேசத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்டுள்ளதகவும் கூறினார்.
Related Tags :
Next Story