ஜம்மு-காஷ்மீர் முன்னாள் மந்திரி ஹவாலா வழக்கில் கைது


image credit:ndtv.com
x
image credit:ndtv.com
தினத்தந்தி 9 April 2022 7:29 PM IST (Updated: 9 April 2022 7:29 PM IST)
t-max-icont-min-icon

ஹவாலா பண வழக்கில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் மந்திரி பாபு சிங் கைது செய்யப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர்,

ஹவாலா பரிவர்த்தனைகள் செய்ததாக நான்கு பேரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ. 6 லட்சத்திற்கும் அதிகமான பணம் பாபு சிங்கிடம் ஒப்படைக்கப்பட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாபு சிங்கை போலீசார் கைதுசெய்தனர். அவர் விசாரணைக்காக ஜம்முவிற்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

கைது செய்யப்பட்ட பாபு சிங், கடந்த 2002-ம் ஆண்டு பிடிபி-காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story